அவர்கள் தைரியம் கொண்டவர்கள் அவர்கள் உண்மையை நோக்கிய பயணத்தை செய்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் மனிதகுல மேன்மைக்குண்டான சிந்தனைகளைக் கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி நடத்துவது என்று இயல்பாகச் சொல்லும் வார்த்தைகளே நமக்கு தத்துவமாகத் தெரிகிறது.அதன்படி நம்நாட்டு வேதாந்தங்கள் , சைவ சித்தாந்தங்கள் சத்தர்களின் சந்தனைவழி நின்று அவர்கள் கூறிய சாரத்தோடு விஞ்ஞானத்தை நிறைவாகச் சேர்த்து அதி உன்னத உண்மைகளை இந்த உலகிற்கு எவ்வித அச்சமுமின்றி, தயக்கமுமின்றி கூறியவர்தான் நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்த மகான் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.மெய் ஞானத்தின் உண்மைகளை மெருகேற்றி,உருவாக்கி எளிமையாக்கி விஞ்ஞான சரக்காக்கி வித்தையாக்கி வீதிவலம் கொண்டுவந்து படிப்பறியா பாமரனும் அறியும்படி இயற்கை என்ற விந்தை நிறைந்த சக்தியையும் அதற்கு மூலமான எல்லா வல்ல பரம்பொருளையும் , இறை ஞானமாகத்தெளிவாக இனிமையாக போதித்தவர்தான் நமது குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் !
சிந்தையும் செயலும் இணைந்ததுதான் மனிதம்.சிந்தைக்கு வேண்டியது ஒருமைப்படுத்துகிற இறைநெறி! செயலுக்கு வேண்டியது அன்பில் விளைந்த அறநெறி! சிந்தை மூலத்தை(இறைநிலையை) நினைக்கட்டும் செயல் ஞானத்தை நனைக்கட்டும்! சிந்தையின் ஞானமே செயலின் சத்தியம்! ஞானமில்லையேல் சிக்கல் தொடங்கும் ஏமாறுவோம் அல்லது ஏமாற்றுவோம்! ஞான தீபத்தை மனவளக்களை பயிற்சியில் ஏற்றுங்கள். மன்றத்திற்கு வாருங்கள்! உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள்! -வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment