அருட்காப்பு

அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்!

சங்கல்பம்


அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்!

உலக சமுதாய சேவா சங்கம்





26, 11.வது கடல் நோக்குச் சாலை,
வால்மீகி நகர்,
திருவான்மையூர்,
சென்னை - 600 041.
போன் 044 - 24411692
e-mail : chennai@wcsc.info
website :http://vethathiri.org/

நான் யார்?










நான் உடல் என்று குறுகி நிற்பதா? நான் மனம் என்று விரிந்து நிற்பதா? நான் உயிர் (ஆன்மா) என்று உயர்ந்து நிற்பதா? நான் பிரம்மம் என்று உணர்ந்து, முழுதுணர்ந்து நிற்பதா? குறுகி நின்றால் விரிவு இல்லை. விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும் தான் உண்டு, உயர்வு இல்லை. உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டுந்தான் உண்டு; உணர்வு, முழுதுணர்வு இல்லை. உணர்ந்து நின்றால் இவை அனைத்தும் உண்டு. உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனம் என மறுபெயர் பெற்றிருக்கிறது. உயிரோ அணுக்கூட்டம். அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே, நான் பிரம்மம் என்பது தெளிவாகிறது. நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலை உணர்ந்த தெளிவில்தான் ஆசை ஒழுங்குறும். எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, எதை விடப் பெரிது வேறொன்றும் இல்லையோ, அதுவே நானாக இருக்கும் போது அந்நிலை உணர்ந்த தெளிவில் தான் இருக்கும் போது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவா எழ இடம் எது? என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்தபோது எதெதனோடோ என்னை ஒப்பிட்டுக் கொண்டேன். அப்போது நான் பெரியவன், நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது. ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்ட போது எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லாமலல்லவா போய் விடுகிறது. நானே பிரம்மம் ஆக இருக்கிறேன், பிரம்மம் எல்லாமாக இருக்கிறது என்னும்போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாக இருக்கும் நிலையையும் நான் உணர்ந்து மறவாமல் இருக்கும் போது, எதன் மீது பற்று வைப்பது? என்னுடையது என்ற பற்று எழ முகாந்திரமே இல்லையே! நான் இன்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் நான் யார்? நான் பிரம்மம் என்ற தெளிவுதான்.



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி









வாழ்க்கைத் தத்துவம்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்டதே வாழ்க்கை. ஆறறிவு படைத்த நாம் பிறந்த உடனே நடப்பதில்லை. ஆனால் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்கள் பிறந்த சிறிது நேரத்திலேயே நடக்கின்றன. நாம் வாழும் வாழ்க்கை இன்பமாகவே உள்ளது. ஆனால் நம்முடைய புலன்கள் வழி செல்வதாலும் பழக்கத்தாலும், சூழ்நிலைகளாலும் பெரும்பாலும் துன்பத்தை உண்டாக்கி கொள்கிறோம். கல்லூரிக்குச் செல்ல 12 வகுப்புகள் படிக்க வேண்டும் என்பது போல் வாழ்வில் முழுமைப்பேறும் குணநலப் பேறும் அடைய 12 வாழ்க்கைத் தத்துவப்படிகளை அளித்துள்ளார்.

தேவைகள் மூன்று : நம் உடலின் தேவைகளை மூன்றாகப் பிரித்துள்ளார். பசி, தாகம்,. முதல்படி. தட்பவெப்ப நிலையி லிருந்து நம்மைக் காத்துக் கொள்ளல் இரண்டாம்படி, உடலின் கழிவுகள் நீக்கம் மூன்றாம் படி.

காப்பு மூன்று : பிறஉயிர்களின் தாக்கு தலில் இருந்து காத்தல், மழை, புயல், பூகம்பம் போன்றஇயற்கைச் சீற்றத்திலிருந்து காத்தல், தற்செயல் விபத்து நடக்காமல் (accident) காத்தல்.

அறநெறி மூன்று : தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரா வகையில் எண்ணம், சொல், செயல்களை அமைப்பது ஒழுக்கம். தான், குடும்பம், உறவினர், ஊர், உலகம் என்றஐந்து வகையான கடமை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தேவைப்படுவோர்க்கு, அந்த நேரத்தில் உதவுதல் ஈகை.

அறிவின் நிலை : அடிப்படைத் தேவையான நம்பிக்கை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் பெறுமளவு அறிவு நிலையில் வாழ்தல். தன்னையறிந்த பின் முழுமை நிலையடைதல்.

நாம் ஒரு சிறு துரும்பாய் வாழ்க்கை யெனும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் நிலையில் இந்த 12 படிகளும் நமக்கு படகாய் இருந்து நம்மை கரை சேர்க்க உதவும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மனித சக்தி மகத்தான சக்தி

உடல் லகுவாக இருக்க வேண்டும் Ease ful Body. மனம் அமைதியாக இருக்க வேண்டும் Peaceful Mind. வாழ்க்கை உபயோகமாக இருக்க வேண்டும் மள்ங்ச்ன்ப் கண்ச்ங். அதற்கு நாம் வாழும் காலத் திலேயே வாழ்ந்து கொண்டு

இருக்கும் தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லிக் கொடுத்துள்ள உடற்பயிற்சிகள், தவங்கள், காயகல்ப பயிற்சி, தற்சோதனை முறைகள் உறுதுணையாக உள்ளன.

அவர் பொள்ளாச்சி அருகில் ஆழியாறில் அருட்பெருஞ்சோதி நகரை உருவாக்கி அங்கு ஓம்கார மண்டபம் அமைத்து, தங்கி இன்றும் உலக அமைதிக்காக மவுனம் உட்பட பல பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இரண்டொழுக்கப் பண்பாடு

இவ்வுலக இன்னல்களிலிருந்து விடுபட இரண்டொழுக்கப் பண்பாடு கூறுகிறார்.

1. “நான் எனது வாழ்நாளில் பிறரது உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தரமாட்டேன்”2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.ஆகா! என்ன அற்புதமான வரிகள். அனைவரும் இதைக் கடைப்பிடித்தால் துன்பமே இவ்வுலகில் இருக்காது.இன்புறுவோம்! இயல்பாய் வாழ்வோம். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பிறந்த நாள் பரிசாக இரண்டொழுக்காப் பண்பாட்டை, மேற்கொள்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

நன்றி தன்னம்பிக்கை மாத இதழ்

இறைநீதி

இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், 'ஐயோ! நான் கடவுளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே' என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன! அதனால், 'அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே!' என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி. இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதைக் கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் 'இன்னும் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லையே! எப்போதோ வர வேண்டுமே! இன்னும் வரவில்லையே!' என்று குறைபடுகிறோம். அதனால் என்ன ஆனது? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது. இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனே தான். எல்லை கட்டிய மனநிலையில் நாம் 'இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நல்ல்து, அது கெட்டது' என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இதுவரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், 'அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மனதை மறுபுறம் திருப்பிவிட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நான் உங்களுடன் இருப்பேன்



நான் வான் காந்த அலையில் கலந்துள்ளேன் உங்களுக்கு தவத்தில் எந்த இடர் ஏற்பட்டாலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் நினைக்கும்போது நான் உங்களோடு கலந்து விடுவேன் என் கையை பிடித்துக்கொண்டே நீங்கள் தவத்தில் உயரலாம். உங்களுக்கு வரும் எந்த இடரையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன்மீகத்தில் குரு காணிக்கை என்பது ஒன்று உண்டு. அதை நான் உங்களிடம் வேண்டுகிறேன். உங்களுடைய சினத்தை, பொறாமையை உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்களை தவறான செய்கைகளை எனக்கு குரு காணிக்கையாக இன்றிலிருந்து தந்துவிட வேண்டுகிறேன்".


-அருட்தந்தை

எனது வாழ்க்கை வரலாறு - வேதாத்திரி (6)

Tuesday, August 5, 2008




இந்தச் சந்தர்ப்பத்தில் தான் “பரஞ்ஜோதி” என்பவர் சென்னையில் ஒரு ஞான சபை அமைத்தார். அவர் தீட்சை முறையைப் பற்றி ஒரு நண்பர் என்னிடம் விளக்கினார். உடனே நான் அங்கு சென்று விசாரித்து அச்சபையில் உறுப்பினராகி விட்டேன். அவர் விளக்கியது குண்டலினியோக தீட்சை முறைதான். சாந்தியோகமென்னும் இறங்குபடிமுறை அவரிடம் ஒரு சிறப்பான பயிற்சி. ஒழுங்கான முறையில் தீட்சை பெற்றுச் சிந்தனையோடு பயின்றேன். என் மனதிற்கு ஒத்ததாக இருந்தது. இதுவரையில் யானறிந்திருந்த தத்துவ விளக்கம் தியான முறை இவற்றோடு இதை இணைத்து ஆராய்ந்து வந்தேன். பல அன்பர்கள் அச்சபைக்கு வருவார்கள். அவர்களில் பலர் எனக்கு நண்பர்களாயினர். எனது கருத்துக்களை விளக்குவதற்கும், கூட்டாகத் தவம் பயில்வதற்கும், பரஞ்ஜோதி சுவாமிகளின் ‘உலக சமாதான ஆலயம்’ என்ற ஞானசபை பொருத்தமாக இருந்தது.
இரண்டாம் திருமணமாகிப் பத்தாண்டுகள் ஓடிவிட்டன. குழந்தைப் பேறு இல்லை. எனக்கு குழந்தை இல்லையே என்ற கவலை சிறிது கூட இல்லை. ஆயினும் என் மனைவிகட்கு மட்டும் கவலை அதிகம். இரண்டு பெண்களை ஒருவர் மணம்செய்து கொள்வது கூடாது என்பது, எனது முடிவுதான் என்றாலும், நானே அந்தப் பாவத்திற்கு ஆளாகி விட்டேன். ஆனால் என்னைப் பார்த்து மற்றவர்கள் இதே தவறைப் புரியக் கூடாது என்று எண்ணினேன். இந்த எண்ணத்தில் என் அனுபவங்கள் அனைத்தும் கூடி “இரு தாரம்” என்ற தலைப்பில் பன்னிரண்டு கவிகளாக உருவாயிற்று.


அவற்றைக் கீழே படியுங்கள்.


முதல் மணம்


“உத்தமியாள் அறிவுடடையாள் பதியாய் என்னைஉவந்தேற்றாளை மணந்து நலமாய் வாழ்ந்தேன்.பத்துவருடம் கழிந்தும் குழந்தை இல்லைபக்திநிலை அக்காலம் எங்களுக்குப்புத்திரனில்லா தோர்கள் பாவி என்றுபுனைந்த கற்பனைக் கதைகள் படித்ததோடுநித்தம் அதனைச் சுட்டிக்காட்டி உற்றார்நிந்திக்கும் சொற்களையும் கேட்டு நொந்தோம்.”


“பெண்குலத்தின் இரத்தினமாம் என்மனைவிபெரும்அளவில் துன்புற்று என்னைநோக்கிக்கண்கலங்கி “நீங்கள் மற்றும் ஒருபெண் தேடிக்கல்யாணம் செய்தாக வேண்டும், இன்றேல்பண்பறியா மனிதர்பலர் இழித்துக் கூறும்பழிப்புரைகளைக் கேட்டுச் சகியேன்? என்றாள்.புண்பட்ட என்நெஞ்சம் மேலும் புண்ணாய்ப்பொறுத்திருநீ ஓர் ஆண்டு என்று சொன்னேன்.”


எங்கள் கருத்து

பெண்டிரண்டு கொண்டாலும் சுகமில்லைபெருநெருப்பு சாகளவும் துக்கம்” என்றபண்டைமொழி ஒரு ஆண்டு தினமும் பாடிப்பார்த்திடுவேன் அவளை மனம்மாற்ற எண்ணி;அண்டை அயலார் உற்றார் நிந்தைகேட்டுஅலுத்திருக்கும் அவளுக்கோ அமைதியில்லை;“சண்டைவரும் என நீங்கள் எண்ண வேண்டாம்சகல துறையிலும் ஒத்துவாழ்வேன்” என்றாள்.


மனிதன் இயல்பு
“இன்பமே எல்லோரும் விரும்புகின்றோம்எப்போதும் கற்பனையால் பெரும்பாலோர்கள்துன்பமே தோற்றுவிக்கும் செயல்கள் செய்துதுயரடையும் மனிதஇன இயல்புக் கேற்பஅன்புருவாம் முதல்மனைவி அருகிருக்கஅடுத்து ஒருபெண்ணை மணம்செய்து கொண்டேன்இன்றுவரை முன்னவள் சொல் மீறவில்லைஎனினும் பின்வந்தாட்கப் பொறுப்பு ஏது?”


வாழ்க்கைப் பளுவும் பொறுப்பும்
“பெரும்பளுவை வாழ்க்கையிலே ஏற்றுக்கொண்டேன்பெண்கள் இருபேர்களது உள்ளத் தூறிவரும்வேக உணர்ச்சிகளைக் கூர்ந்துநோக்கிவாழ்க்கையிலே அவ்வப்போ கடமையாற்றத்துரும்பசைக்க நினைத்தாலும் உயர்வு தாழ்வுதோற்றாத முறையினிலே எண்ணிச் செய்வேன்அரும்நண்பர் உற்றார்கள் எங்கள் வாழ்வில்அமைதிகண்டு மனநிறைவு கொள்ளும்வாறு.”


கவலையில் மாற்றம்
“மற்றும்ஒரு பத்தாண்டு கழிந்து போச்சுமனைவிகட்கு யானும் எனக்கவர்ளன்றிபெற்ற குழந்தை வேறுஇல்லை இப்போபேசுவது எதைப் பற்றி? பெண் ஒருத்திமற்றவளுடன் ஒத்துவாழ வென்றால்மணாளனெனும் பொறுப்புடையான் அனுபவத்தில்கற்றவித்தை மற்றும் ஒருசமயம் ஒவ்வாகணத்திற்கு கணம் புதியநிலைமை தோன்றும்.”



இந்தியப் பெண்களின் உயர்ந்த நீதி
“சிந்தனையில் உயர்வான மனித வர்க்கம்சிறப்பாக மதிக்கும் பலபொருட் களுண்டுஇந்திய நாட்டில் பிறந்த பெண்களுக்கோஇல்வாழ்வில் கணவனிலும் உயர்ந்ததானஎந்தப் பொருளும் இல்லையெனில் ஓர்பெண்ணின்எண்ணத்தில் எத்தகைய புயல் உண்டாகும்பந்தத்தால் உடலுயிர்கள் ஒன்றுபட்டபதியையே மற்றும் ஓர்பெண் பங்குகொண்டால்.”


மேல் தோற்றத்தால் ஏமாறாதீர்
“எத்தனையோ சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால்இரண்டு மனைவிகள் கொண்டோர் பல பேர் உண்டுபத்து குடும்பம் தேர்ந்து வாழ்க்கை ஆய்ந்தால்பல விதத்தும் அவர்கள் படும்பாடு காண்பீர்சொத்தை பல உள்ளிருக்கும் வெளித் தோற்றத்தில்சுகமே கற்பனை செய்து ஏமாறாதீர்ஒத்து வந்தால் மூவருள்ளும் வாழ்நாள் எல்லாம்உலக அதிசயங்களிலே அதுவும் ஒன்றாம்.”


அறிவின் ஒளி
“இரண்டாம் பெண் கொண்ட சில நாட்களுக்குள்எனக்கு உள்ளுணர்வு நிலை விளங்கிப் போச்சுமிரண்ட அறிவின் நிலையில் சோதி யானமின்னலைப் போல் ஒளிகண்டேன் அறிவறிந்தேன்புரண்டு வரும் இன்பதுன்ப வெள்ளம் தாங்கும்பொறுமை யெனும் கடலானேன் உலகில் வாழ்ந்துதிரண்ட அனுபவங் கடமை முதலாய்க் கொண்டுதெளிவுடனே வாழ்முறை வகுத்துக் கொண்டேன்.’


எனக்கமைந்த சூழ்நிலைகள்
“சுருங்கச் சொன்னால் எனக்கு அமைந்த நல்லசூழ்நிலைகள் பல அதனால் இரண்டு பெண்கள்நெருங்கி உறவாடி ஒரு குடும்பமாகநேசித்து வாழ்கின்றார் ஒவ்வோர் வேளைஇரும்பொத்த என் மனமே சலனங்கொள்ளஏற்ற மனக்கலக்கமுறும் நிகழ்ச்சி தோன்றும்வருங்காலத் தவர்களுக்கு விழிப்பை ஊட்டவாழ்ந்து கண்ட அனுபவமாய் இதைச் சொல்கின்றேன்.”


சட்டத்திலும் பொத்தல்
“ஒருவர் இருமனைவிகளைக் கொள்ளும் செய்கைஒவ்வாது சட்டத்தால் எனினும் என்ன?பெருமை படத்தக்க இந்த நாட்டின் பெண்கள்பெற்றவர்கள் உற்றார்கட் கெதிர்ப் பென்றாலும்அருமைக் கணவன் விரும்ப மற்றோர் பெண்ணைஅவனுக்கு மணம் முடித்தும் கடமை செய்வார்வரும் தொல்லை வாழ்நாட்கள் முழுதும் ஏற்பார்“வாதி” யார் அவளைவிட? சட்டம் எங்கே?”


எச்சரிக்கை
“பிள்ளைகளைப் பெற்றெடுத்தோர் வாழ்வில் காணும்பெருந்துன்பம் நன்கறிவார் எனினும் இல்லாச்சள்ளை இலாமல் வாழக் கண்ணால் பார்த்தும்சலன புத்தியுடன் சொல்வதெல்லாம் கேட்டுஉள்ளத்தில் உறுதிகுலைந்திரு பெண் வாழ்வில்ஒருவருமே மனைவிகளாய்க் கொள்ள வேண்டாம்முள்வேலிக்கிடை நடக்கும் போக்கை ஒக்கும்மூச்சுள்ள வரை துன்பம் எச்சரிக்கை!”


இந்தக் கவிகள் பன்னிரெண்டும் எழுதி முடித்த மறுநாள் எங்கள் இல்லத்திற்கு ஓர் அன்பர் வந்தார். அவர் அனந்தபுரத்திற்கு அடுத்த பனைமலைப்பேட்டைவாசி. அவர் பெயர் தண்டபாணி செட்டியார். இரவு சாப்பாடு முடிந்தவுடன் என்னுடன் ஏதோ பேச முயன்றார். அப்போது இந்தக் கவிகளைப் படித்து முடித்து விடுங்கள். பிறகு பேசலாம் என்று எழுதி வைத்திருந்த கவிகளைக் கொடுத்தேன். அவர் என் கவிகளைப் படித்துப் பொருளுணர்ந்து இரசிப்பவர்களில் ஒருவர். எப்போது வந்தாலும் நான் எழுதிய கவிகளைப் படித்து விவாதித்துவிளக்கம் பெறுவது வழக்கம். அந்த முறையில்தான் “இருதாரம்” என்ற தலைப்பில் உருவான கவிகளையும் படிக்கக் கொடுத்தேன். படித்தார்; ஆழ்ந்து சிந்தனை செய்தார். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தது போல கவிகளை என்னிடம் கொடுத்து, இது பலர் வாழ்வைத் திருத்தி அமைக்க உதவும் என்று சொன்னார். பிறகு ஏதேதோ சிறிது நேரம் பேசிவிட்டு அவர் படுக்கப் போய்விட்டார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் ஊருக்குப் போய்விட்டது தெரிந்தது. அவர் வந்தவுடன் திரும்பிப் போவது கிடையாது. எங்கள் கம்பெனிக்கு அவர் மூலம் அறுபது தறிகள் பனைமலைப்பேட்டையிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் நெய்து வந்தன. அவர் நூல் பாவு, பணம் வாங்கிக் கொண்டுதான் போவார். அவர் உடனே திரும்பிப் போய்விட்டது எனக்கு வியப்பாக இருந்தது… எனது தம்பியிடம் மாத்திரம் சொல்லிவிட்டுப் போனது தெரிந்தது. முக்கியமான ஒரு குடும்ப விஷயத்தைப் பற்றிப் பெரியவரிடம் ஆலோசனை கேட்க வந்தேன். அவரிடமிருந்து பதில் கிடைத்துவிட்டது. வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். எனது தம்பி இந்தச் செய்தியைச் சொன்னான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னை அவர் குடும்ப விஷயமாக ஏதும் கேட்கவில்லையே என்று கூறினேன்.
இரண்டு நாட்கள் பொறுத்து அவரிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. “எனது தாய் தந்தையர் எனக்கு இரண்டாம் திருமண ஏற்பாடு செய்திருந்தார்கள். பிள்ளையில்லாக் குறையைப் போக்க, அவர்கள் அவ்வேற்பாடு செய்தனர். அதுபற்றி உங்களைக் கேட்டு கருத்தறிந்த பிறகு பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு, உங்களிடம் வந்தேன். நான் உங்களைக் கேட்கக் கூட இல்லை. அதற்குள் நீங்கள் “இருதாரம்” என்ற தலைப்பில் பன்னிரண்டு கவிகளைப் படிக்க கொடுத்தீர்கள். அதைப் படித்த பின்னர் எனக்குப் போதிய பதில் கிடைத்து விட்டது. இது தெய்வச் செயலாக எனக்குத் தோன்றியது. வீட்டுக்கு வந்தவுடன் திருமண ஏற்பாட்டை ரத்து செய்து விட்டேன். என் மேல் என் பெற்றோர்கட்குச் சிறிது மனவருத்தம்தான். ஆயினும் அவர்களைச் சமாதானப்படுத்தி விட முடியும். என்னை நல்ல சமயத்தில் விழிப்பூட்டிக் காப்பாற்றி விட்டீர்கள்” என்று, கடிதத்தில் குறித்திருந்தது. எனக்குத் தாங்கொணா மகிழ்ச்சி. இந்தக் கவியை அச்சடித்துப் பலருக்குக் கொடுத்தால் நல்லது என்று எண்ணி இரண்டாயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டேன்.
எங்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து என் தம்பிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவது மாதம் அதன் தாய்க்குக் கடினமான நோய் கண்டுவிட்டது. அப்போது குழந்தையை வளர்க்கும் பொறுப்பை எனது இரண்டு மனைவிகளும் ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் அந்தக் குழந்தையை நாங்களே வளர்த்து வருகிறோம். என் மனைவிகட்குப் பிள்ளையில்லாக் குறையை நீக்கிய அந்தப் பெண் செல்வத்தின் பெயர்தான் ஞானாம்பிகை. மிக்க கூர்மையான அறிவு அவளுக்கு. அதை நன்றாக விளங்கிக் கொள்ள அவளுக்குப் பத்து வயதில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரத்தை அடுத்த இதழில் விளக்குகிறேன்.


மனமாற்றம் வேண்டும்
நாசவழி போகாமல் உலக மக்கள்நல்வாழ்வை யடைந்தமைதி காணவென்றால்தேச மத சாதி மொழி இன பேதங்கள்தனிஉடமைப் பற்றொழிய வேண்டும் ஆண்பெண்நேச உடல் உறவினிலே களங்கமற்றநெறிநிலைக்கும் சூழ்நிலைகள் அமையவேண்டும்பாசமென்ற மனமயக்க பழக்கம் விட்டுபண்புடனே வாழவழி காணவேண்டும்.


பதினாறு பேறு
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்அழகுபுகழ் அறம் வாழ்க்கைத் துணைநலம் இளமைஅறிவு சந்தானம் வலிதுணிவு ஆண்மை வெற்றிஆகும் நல்லூழ் விளக்கம் பதினாறும் பெறுவீர்.


மனிதன் மதிப்பு
திறம்பல பெற்றும் சிறப்புள விஞ்ஞானத்தால்அறம்தவம் இரண்டுமின்றி அறிவது குருடாய்ப் போச்சுபுறம் அகம் ஒழுக்கமின்றி பூவுலகெங்கும் பல்லோர்மறந்திட்டார் மனிதன் என்ற மதிப்பையே மயக்கம்துன்பம்.


சிக்கல் அகற்ற
சீர்திருத்த முறையினிலே காலத்திற்கேற்பசிக்கனத்தை வாழ்க்கையிலே செயலாக்கி உய்யசிந்தனையைப் பேரியக்கத் தொடர்களத்தில் செலுத்திசிக்கல்களை யகற்றி மெய்யறிவு பெறச்செய்வோம்.


சமாதானம் காண்போம்
அலைஅலையாய் பெருக்கெடுக்கும் அறிவுவெள்ளம்படுத்தித்தலையாய நம்சக்தித் தரமுணர்ந்துப் பொதுநிதியாம்கலைகள்தமை விலையாக்கும் காலத்தை மாற்றிவிட்டுநிலையான சமாதானம் நிலஉலகில் நாம்காண்போம்.




வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப் போராட்டமாகும். உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே. அதிலிருந்து கிளைக்கும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களும் ஆகும். உடலை விட்டு உயிர் பிரிந்தால் அதோடு அந்த மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விடுகின்றன. எனினும் சமுதாயக் கூட்டமைப்பில் வாழும் ஒவ்வொரு மனிதனுடைய சிக்கல்களில் வேறு பலர் பின்னப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஒருவன் வாழ்வு முடிந்து அவன் சிக்கல் முடிந்துவிட்டாலும் அவனோடு பின்னப்பட்டிருந்தவர்களிடம் சில புதிய சிக்கல்கள் உருவாகிவிடும். சிக்கலில்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது. அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில், எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான். தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்கள்தான் இதற்கு விதிவிலக்கு.
ஒரு மனிதனுக்குப் பசி, வெப்ப தட்ப ஏற்ற உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்து வேகம் இவையே அவ்வப்போது தோன்றிக் கொண்டிருக்கும் இயற்கை வழி வந்த சிக்கல்கள். இவற்றிற்கு இயற்கை வளம், அறிவு வளம், உடல் வளம் என்ற மூன்றும் கூடினால், முறையாகக் காலா காலத்தில் இயற்கைச் சிக்கல்களைப் போக்கிக் கொள்ளலாம். புலன் கவர்ச்சியில் வாழும் மனிதனுக்குத் தன்னை மறந்து அளவு மீறியும் முறை மாறியும் செயலாற்றும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாழ்வில் சிக்கல்கள் செயற்கை முறையில் - அறிவின் குறையால் உணர்ச்சி வயப்பட்டு ஆற்றும் செயல்களால் பெருகுகின்றன.
தன் இயற்கையான தேவைகட்கு இன்றியமையாத பொருள்களையும் வசதிகளையும் மாத்திரம் கொண்டு வாழப் பழகிக் கொண்டால் சிக்கல்கள் இருப்பதே தெரியாது. தினசரி வாழ்க்கைப் பொருட்களின் எண்ணிக்கை பெருகும் அளவிற்கு ஒரு மனிதன் வாழ்க்கைச் சிக்கல்கள் பெருகுகின்றன. தனது பாதுகாப்பில் வாழக்கூடிய மக்கள் எண்ணிக்கை பெருகும் அளவிற்கு அச்சிக்கல்கள் மேலும் பலமடங்கு பெருக்கமடைகின்றன. இவ்வளவையும் அறிந்த மனிதன்தான், சிக்கல்களை வளரவிடாமல், இருக்கதும் சிக்கல்களை நுட்பமான முறையில் போக்கிச்கொண்டு, தெளிவோடு வாழ்வான்.


என் வாழ்விலும் இத்தகைய முறையில் உருவான சிக்கல்கள் பல. அவற்றில் மக்கட்பேறு இல்லாமையும், அதன் காரணமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டதும், எவ்வளவோ சிக்கல்களைப் பெருக்கி விட்டன. எனினும் நான் சிந்தனையில் ஆழ்ந்து தத்துவ விளக்கம் தெளிவாகப் பெற்றபின் அச்சிக்கல்களை எதிர்த்து எளிதில் வெற்றிபெற முடிந்தது. முதலில் மக்கட்பேறு இல்லாத குறை இருந்தது. அது நாளுக்கு நாள் மறந்தே போய்விட்டது. மேலும் மக்கட் பேறின்மையும் எக்காரணத்தால் என்ற சிந்தனையில் ஆழ்ந்த போது எனக்குச் சில விளக்கங்கள் கிட்டின. மக்கட் பேரின்மைக்கு மூன்று காரணங்கள் உண்டு. (1) இளமையில் திருமணம் மறுத்து சன்யாசம் கொள்ளுதல் (2) உடல்நலக் கேட்டினால் விந்து கெட்டுப் போய்விடல் (3) வினைகள் கழிக்கப் பெற்றுப் பரம் பொருளோடு உயிர் இணைந்து நிற்கும் தவம் சித்தி. இவற்றில் மூன்றாவது காரணத்தால்தான் எனக்குக் குழந்தை பிறக்கவில்லையென்பதைத் தெளிவாக உணர்ந்தேன். என் சிறுவயதில் அடிக்கடி பஜனைக்குச் செல்வேன். அங்கு தாயுமானவர் பாடல்களில் ஒன்றான “அங்கிங்கெனாதபடி” என்று தொடங்கும் பாடலை விருத்தமாகப் பாடுவார்கள். அந்தக் கவியில் பொருளுணர்ந்து அதே நிலையில் ஆழ்ந்து நின்று விடுவேன். பின்னர் வீட்டுக்கு வந்த பின்னும் அப்பாடலை மனனம் செய்து இரசிப்பேன்.


“பிறவிப் பெருங்கடல் நீந்துவர்: நீந்தார்

இறைவனடி சேராதார்.


“வீழ்நாள் படா அமைநன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங்கல்.”


என்னும் வள்ளுவர் கருத்துக்கு ஒப்ப எனக்கு அடிக்கடி மெய்ப் பொருளோடு இணைந்து இலயமாகும் பேறு, சிறுவயது முதலே கிடைத்தது. ஆயினும் அதைத் தெளிவாக விளக்கம் பெறப் பல ஆண்டுகள் சென்றன. செயல்களிலும் ஒழுக்கம் பிறழாத அறவழியே செயலாற்றி வாழ்ந்தேன். கடவுளைச் சேர்ந்து முக்தி பெறவேண்டும் என்பதே, சிறுவயது முதல் ஏற்பட்ட அவா. இக்காரணங்களால் பிறவிக்கு உரிய தொடர்பு அறுந்துவிட்டது. மேலும் விந்தின் மூலம்தான் பிறவித்தொடர் என்ற விளக்கமும் கிடைத்த பின்னர், எனக்குக் குழந்தை இல்லைேயே என்ற குறை அறவே அற்றுப் போயிற்று. என் மனைவிகட்கும் ஞானாம்பிகையை வளர்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடன், ஓரளவு குழந்தை வேட்பு அடங்கி விட்டது. அவர்கள் ஆசைகளை யெல்லாம் குடும்பத்திற்கு ஒரே குழந்தையாக வந்த செல்வப் பெண் ஞானத்தை வளர்ப்பதில் திருப்பி விட்டார்கள். அவளைக் காலத்தோடு பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தோம். அவளுக்கு வயது பத்து இருக்கும். அப்போது ஒரு நாள் அவள் எனது நண்பர், அருட்செல்வர் திரு. ஆ. சொக்கலிங்கம் என்பவரை ஒரு கதை சொல்லும்படி கேட்டாள். அவர் மிகவும் அன்போடு திருவள்ளுவர் கதையை எடுத்துச் சொன்னார். அந்தக் கதையில் மணலைச் சோறாக்கி படைத்தார் வாசுகி. அதனால்தான் அவள் பெருமையுணர்ந்து அவளைத் திருவள்ளுவர் திருமணம் செய்து கொண்டார் என்று கதைப் போக்குப்படி என் நண்பர் கூறினார். பொறுமையோடு இதுவரையில் கேட்டுக் கொண்டிருந்த ஞானம். இங்கு சொக்கலிங்கம் அவர்களைக் குறுக்கிட்டாள். நீங்கள் சொல்வது பொய்க்கதை. மணலை எப்படி சோறாக்க முடியும்? அது முடியாத காரியம். ஆகவே, இந்த மாதிரி பொய்யான கதையை ஏன் சொல்லுகிறீர்கள்? என்று இடைமறித்து வினவினாள். நண்பர் ஏதேதோ சமாதானம் கூறிப் பார்த்தார். ஏற்கவே இல்லை. அந்த வேளையில் நான் அங்கு வந்தேன். உடனே நண்பர் என்னைப் பார்த்து என்னங்க திருவள்ளுவர் கதையைச் சொன்னேன். அதில் வரும் மணலைச் சோறாக்கும் நிகழ்ச்சி பொய் என்று கூறி வாதம் செய்கிறாள் ஞானம். நீங்களாகிலும் கொஞ்சம் அவளுக்குச் சமாதானம் கூறுங்கள் என்றார். உடனே நான் அவர்களோடு உட்கார்ந்தேன். கதை உண்மைதானம்மா. ஆனால் கருத்து அதில் மறைக்கப் பெற்றிருக்கிறது என்ற அந்த மறைபொருளை அவள் விளங்கிக் கொள்ளுமாறு உணர்த்தினேன். அவளுக்கும் நிறைவு ஏற்பட்டது. நண்பரும் மனமாற்றம் அடைந்தார். இரண்டு நாட்களில் அந்த நிகழ்ச்சிகள் ஐந்து பாடல்களாக உருவாயின. அவற்றைப் படியுங்கள்.


பகுத்தறிவு வாதம்
“எனது மகள் ஞானமெனும் சிறுமி ஓர்நாள்என் நண்பரை நோக்கிக் கதை சொல்லென்றாள்மனது மிக உற்சாகம் கொண்ட வட்குமாமுனிவர் வள்ளுவர் கதையைச் சொன்னார்உனது கதை சரியில்லை மணலைச் சோறாய்ஒருவருமே சமைக்கு முடியாதென்றாள் பின்நினது கருத்தென்னென்று என்னைக் கேட்டாள்நீதிபதி பொறுப்பேற்றேன் இருவர் முன்னே. “

அறிவின் திறனால் உணர்த்திய காதல்
“உத்தமியாள் அறிவுடையாள் பதியாய்த் தன்னைஉவந்தேற்பாள் ஒருவளைத் தேர்ந்திட வள்ளுவர்பித்தனைப்போல் மணல் முடிச்சுடன் திரிந்தார்பேரறிவால் வாசுகி யூகித்தறிந்தாள்வித்தையெனப்பலர் முன்னே மணல் கைக்கொண்டாள்வீசியெறிந்தாள் மறைவில் அரிசிச்சாதம்சித்தம்மகிழ்ந்தே படைத்துச் சூழ்ந்தோர்க் கெல்லாம்சிந்தை நிலையறிவித்தாள் எனநான் சொன்னேன்.”


நண்பர் சிந்தனை
“இப்படித்தான் அந்தகதை இருக்க வேண்டும்ஏன்அதனை மாற்றிவிட்டார் என்றார் நண்பர்ஒப்பற்ற உயர்வான அறிவின் ஆற்றல்உடையவர்களில் கூட பலபேர் இன்றுஎப்போதும் கற்பனையில் ஆழ்ந்து ஆழ்ந்துஇன்பமடையும் பழக்கம் கொண்டுள்ளார்கள்அப்படியே அவரவர்கள் போக்குக் கேற்பஅறிவிற்கு விருந்தளிக்கும் தொண்டீதென்றேன்.”


மனங்கவர வியப்பூட்டல்
“அணுவினிடம் பரிணாமம் ஈர்ப் பியக்கம்அறிந்து விட்டோர் பெருகிவிட்ட காலம்ஈதுஅணுஅணுவாய் ஆராய்ந்து பார்த்து விட்டோம்அரிசியின்றி சோறாக மணல் மாறாதுஅணுஞானம் இன்னதென்றே தெரியா தோர்கள்அறிவிற்கு வியப்பூட்ட விருப்பம் கொண்டோர்அணுதத்துவத்திற்கே முரணாய் அந்நாள்அனேக கதைகளை இதுபோல் செய்தார் என்றேன்.”




நண்பர் முடிவு
“பத்துவய துடைய சிறுபெண் தொடுத்தபகுத்தறிவு வாதத்தைக் கேட்டேன் இன்றுஇத்தனைநாள் வரையில் இந்தக் கதையின் நுட்பம்என்னவென்று ஆராயப் புகுந்தேனில்லைஎத்தனையோ கதைகளில் வரும் இதனைப் போன்றஇயற்கைக்கு ஒவ்வாத நிகழ்ச்சி நம்பும்தொத்து நோய் தனிலிருந்து தெளிவு காணும்துணிவுஇன்றே பிறந்து விட்டதென்றார் நண்பர்.”


இந்தக் கதையில் ஒரு நுட்பம் இருக்கிறது. வள்ளுவர் அறிவிற் சிறந்தவளாகவும், தன்னை விரும்பி, கணவனாக ஏற்றுக் கொள்பவளாகவும் ஒரு பெண்ணைத் தேர்தெடுக்கத் திட்டமிட்டார். மணலை முடிச்சுப் போட்டுக் கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து வந்தார். இந்த மணலை வாங்கிக் கொண்டு சாதம் சமைத்து எனக்கு அளிக்கும் ஒரு நல்லாளைத் தேடுகின்றேன் என்றார். எவரும் அதில் உள்ள நுட்பத்தை உணரவில்லை. வாசுகி அறிவு நுட்பத்தால் இந்த மறைபொருளை உணர்ந்து கொண்டாள். மேலும் வள்ளுவரை மணந்து கொள்ளவும் முடிவு கொண்டாள். நான் உங்களுக்குச் சோறு சமைத்துப் போடுகிறேன் என்று மணலை முறத்தில் வாங்கிக் கொணடாள். அதைக் கொட்டிவிட்டு அரிசி போட்டுச் சமைத்து, சாப்பாடு போட்டாள். திருவள்ளுவருக்கு இதனால் அவள் தன்னை விரும்பி ஏற்றுக் கொண்டாள் என்பது உணரப் பெறுகிறது. அதற்காகவே கையாண்ட தந்திரம்தான், மணல் முடிச்சு என்பதை உணர்ந்து, அதைப் பெற்றுக் கொண்டதனால், அவள் அறிவுக் கூர்மை உணரப் பெறுகிறது. இந்த இரண்டு தகுதிகளையே எதிர்பார்த்தார் திருவள்ளுவர். அத்தகுதியுள்ள ஒருத்தியைத் தேர்ந்து திருமணம் முடித்து இல்லறம் ஏற்றார். இவ்வாறு தான் அந்தக் கதையின் கருத்து இருக்க வேண்டும் என்று நான் விளக்கினேன்.
சித்து விளையாடல் மூலம் ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றியும், இல்லாத பொருளை வரவழைத்தும் சிலர் காட்டுவார்கள். நாம் பார்க்கிறோம். இவ்வாறு வாசுகியம்மைறாரும் செய்திருக்கலாமல்லவா? எனச் சிலர் எண்ணலாம். சித்து என்பது ஒருவர் பிறரை, ஏமாற்றும், ஏய்க்கும், ஒருவித கலையாகும். இது அறிவின் உயர்வின்பாற் பட்டதல்ல. ஆன்மீக வளர்ச்சியின் உயர்வின் எடுத்துக் காட்டுமல்ல. அம்முறையில் வாசுகி செய்திருந்தால் வள்ளுவர் அவளை மணந்திருக்க மாட்டார். ஏன்? அவர் அறிவிற் சிறந்தவர். மெய் விளக்கம் பெற்றவர். இவ்வகையில் விரிந்த என் விளக்கம் கேட்டு இருவரும் அமைதி பெற்றனர். இந்தக் கவிகளையும் பிறகு அச்சடித்து அப்போது வெளியிட்டேன். பலர் படித்து மகிழ்ந்தார்கள்.
என் வாழ்நாட்கள் எல்லாம் சிந்தனையிலேயே கழித்து வந்தேன். சிந்தித்த முடிவுபடி செயல்புரிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனினும் பொதுவாக மனித இயல்பான மயக்கமும் அவ்வப்போது எழத்தான் செய்தது. எப்போதோ ஒரு செயல் பழக்கத்தின் வழியே நடந்து தவறான விளைவுகளையும் தரும்.




என் வாழ்விலே நான் மறக்க முடியாத தவறாக இரண்டு கொடுமைச் செயல்களைச் செய்துவிட்டேன். அவை உணர்ச்சி வயப்பட்ட நிலையில், சினத்தின் எழுச்சியால் விளைந்தவை.
நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினேன். அப்போது எனக்கு வயது இருபத்திரண்டு. ஒரு சிறு பையன், எட்டு வயது இருக்கும். அவன் மட்டித் தனமாக இருந்தான். அவன் பாடங்களைச் சரியாகப் படிக்கவில்லையென்று, பிரம்பினால் கைபோனபடி கீழும் மேலும் திருப்பித் திருப்பி விளாசி விட்டேன். அந்தக் குழந்தை பதை பதைத்து அழுத காட்சி என் உள்ளத்தை உருக்கிவிட்டது. “சார்! சார்! வலிக்கிறது சார்! தாங்க முடியவில்லை சார்” என்று அவன் கெஞ்சிய கூச்சலில், என் மனம் உடனே விழிப்பு நிலை பெற்றது. உடனே அவனை அணைத்துக் கொண்டேன். மற்ற குழந்தைகள் எல்லோரும் எங்களையே பார்க்கின்றனர். எனது கண்களில் நீர் பெருகிவிட்டது. பிரம்பை வீசி எறிந்து விட்டேன். இனிமேல் நன்றாக படியப்பா. நான் அடிக்க மாட்டேன். நன்றாகக் கற்றுக் கொடுக்கிறேன் என்று, பாடம் சொல்லத் தொடங்கினேன். இடது கையால் அவனை அணைத்துப் பிடித்துக்கொண்டு அவன் கையில் பிடித்திருக்கும் புத்தகத்தில் வலக்கை விரலால் எழுத்துக்களைக் காட்டிப் பாடம் சொன்னேன். எனது கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. குரல் கம்மிவிட்டது. என்னால் அங்கு நிற்க முடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டுச் சற்று முன்னதாகவே வீட்டுக்குப் போய் விட்டேன். அன்று முழுவதும் எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. அந்த அப்பாவிக் குழந்தை, என் கைப் பிரம்பு. இரக்கமற்ற முறையில் நான் கொடுத்த அடி, அந்தக் குழந்தைக்கு நான் அன்று செய்த கொடுமை, திருப்பித் திருப்பி என் மனதை வாட்டியது. அன்று இரவு எனக்கு சீக்கிரம் தூக்கமே வரவில்லை. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டேயிருந்தது. அன்று முதல் குழந்தைகளை நான் அடிப்பதே இல்லை. அது மாத்திரம் இல்லை. எந்தக் குழந்தையைக் கண்டாலும் அன்பு பாராட்டத் தொடங்கினேன். இது ஒரு கொடுமை. நான் என்னை மறந்து சினத்தால் ஆற்றியது.
என் வயது முப்பத்தி ஏழு. அப்போது ஒரு கொடுஞ்செயல் செய்துவிட்டேன். எனது இளைய மனைவி இலட்சுமி நான் குளிக்கும் இடத்திற்கு உடம்பு தேய்க்க வந்தாள். மார்கழி மாதம். குளிர் நடுங்குகிறது. குளிர்ந்த நீரில் குளிக்கும் நான் முதலில் தண்ணீரைத் தொட்டு உடல் முழுக்கத் தேய்த்துச் சிறிது தோலுக்கு உணர்ச்சி மாற்றம் ஏற்பட செய்து, பிறகே குவளையினால் நீர் எடுத்துத் தலையிலும், உடம்பிலும் ஊற்றுவேன். அதுபோல் சிறுகச் சிறுகத் தண்ணீர் எடுத்து உடம்பில் தேய்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் இலட்சுமி, கையில் ஒரு வாளி எடுத்து நீர் நிறைய மொண்டு ஏன் இவ்வாறு பயப்படுகிறீர்கள். ஒரு வாளி ஒரே தடவையாக ஊற்றினால் குளிர் தெளிந்துவிடும் என்று தலையில் ஊற்றிவிட்டாள். எனக்கு தாங்க முடியாத உணர்ச்சி ஏற்பட்டது. சினம் மீறி விட்டது. குளிர் எப்படி இருக்கிறது என்று நீ பார் என்று நான் ஒரு வாளி தண்ணீரை மொண்டு அவள் தலையில் அப்படியே ஊற்றி விட்டேன். அவள் ஒன்றுமே பேசவில்லை. சிலைபோல் நின்றுவிட்டாள். தலையில் ஒழுகும் தண்ணீரை வழித்துவிட்டுக் கொண்டாள். ஆனால், அவள் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது. முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே விக்கினாள். அவளுக்குக் குளிர் ஏற்படச் செய்தது, அப்படி ஒன்றும் கொடுமை அல்ல. அவள் தன் கணவன் என்ற உரிமையில் விளையாட்டாக என் மீது குளிர்ந்த நீரை ஊற்றினாள். ஆனால் அவள் புண்படும் வகையில், நான் சினம்கொண்டு அவளிடம் நடந்துகொண்ட விதம், மிகவும் கொடுமை என உணர்ந்தேன். உடனே அவளுக்கு ஆறுதல் கூறினேன். எனினும் எனக்கு மட்டும் ஆறுதல் கிட்டவில்லை. இத்தகைய முறையில் சினம் எழாமல் காக்க முனைந்தேன். பல வழிகளைப் பின்பற்றினேன். அதன் தொடரில் வந்த சிந்தனைத் தெளிவே, அறுகுணச் சீரமைப்பு என்ற ஒரு பெரிய உலக நலக் கருத்து உருவாகியது. தற்சோதனை எனும் உளப்பயிற்சி முறை உருவாயிற்று.
தவறு செய்தல் எல்லோருக்கும் இயல்புதான். சிந்தனை ஆற்றல் இல்லாதவர்கள். அந்தத் தவறுகளைப் பெருக்கிக் கொண்டே போவார்கள். சிந்தனைத் திறன் உடையவர்கள் தவறு செய்து விட்டால் அதன் விளைவைக் கணித்து, தாம் இனி அத்தவறு செய்யாத விழிப்பு அடைவதோடு, மற்றவர்களும் இத்தகைய தவறு புரியாமலிருக்க என்ன வழியுண்டு என்று ஆராய்ந்து முடிவு கண்டு, பயன் விளைப்பார்கள். இத்தகைய முயற்சியிலே விளைந்த கவி இங்கே படியுங்கள்.


அறிவைப் புலன்களில் அதிக நாள் பழக்கினேன்அதன்பயன் உணர்ச்சிகள் அறிவை வென்றனஅறிவை யறிவால் ஆராயப் பழகினேன்அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்அறிவு அகண்டா காரத்தில் நிலைபெறஅதிக விழிப்பும் பழக்கமும் பெற்றதுஅறிவு புலன்களை அறிந்தது வென்றதுஅங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்”.


மனிதனும் தெய்வமும்
இருப்புநிலை இறைவெளியாம் ஈர்ப்பு ஆற்றலாகும்இயக்கம் அதன் நுண்பகுதி எதிர்த்து தள்ளும் ஆற்றல்கருப்பொருளாம் இவ்விரண்டும் காந்தம் என்ப தாச்சுகாணுகின்றோம் பேரியக்க களத்தில் உயிர்வகையில்திருப்பொருளாய் இயங்கும் மனம் தேர்ந்து இறையுணரதெய்வம் ஈர்ப்பு அறிவாயும் அதன் திணிவே அலையாய்விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் உணரும் மனம் அறிவோம்வேண்டல் வளம் கண்டு வினை விளைவறிந்து வாழ்வோம்.


பேரியக்க மண்டலத்தில் பெரிய பெருங்கோள்கள்பிறப்பு இறப்பிடை மனிதன் பிறஉயிர் அனைத்தும்சீரியக்க ஆற்றல் காந்த சிறப்பென உணர்ந்தால்செத்துப் போகவே பிறந்து வாழும் மாந்தர் வாழ்வில்போரியக்கக் காரணமாம் ‘தான்’ ‘தனது” என்னும்பொருள், புகழ், செல்வாக்குப் புலன் மயக்கம் வாழ்வில்வேரழிக்கும் அறுகுணங்கள் ஐந்து பழிச்செயல்கள்விளையாது நட்பு அன்பு கருணை இவை ஓங்கும்.

அஞ்சுவதேன் துணிந்து சொல்வோம் அறிவது நான் தெய்வம்அதுவேதான் வான்காந்தம் அகண்டமண்டலத்தில்பஞ்சமிலா விண்மையப் பகுதி இறை அறிவாம்படர்க்கைநிலை மனம் அது நாம் பகரும் சீவகாந்தம்வஞ்சமிலா சிவகாந்தம் வான் காந்தம் இரண்டேவாழ்உயிர்கள் வான்கோள்கள் வளம் ஒழுங்கு காக்கும்பஞ்சபுலன் கவர்ச்சியிலே பழகிக்கொண்ட மனிதன்பரவசமாய் இன்பமுறப் பாடினேன் இவ்வுண்மை.





எனக்கு இளம் வயதில் ஏற்பட்ட ஐயங்கள் மூன்று.

அவை :
முதலாவது, தெய்வத்தைப் பற்றியது. கடவுள் யார்? எங்கே எப்படி உள்ளார்? அவரைக் காண்பது எப்படி?


இரண்டாவது, ஐயம், உயிரைப் பற்றியது. உயிர் என்பது என்ன? எங்கிருந்து எப்படி வந்தது?

பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்குப் பின்னும் உயிரின் நிலை என்ன?

மூன்றாவது, வறுமையைப் பற்றியது. அது இயற்கையா? செயற்கையா? அதனைப் போக்க முடியுமா? அப்படியானால் எவ்விதம்? இம்மூன்று வினாக்களுக்கும், எனது வயது முப்பத்து ஐந்துக்குள் தெளிவான விளக்கங்களைக் கண்டு விட்டேன். தோற்றமாகக் காணும் எப்பொருளிலும் மெய்ப் பொருளாக இருப்பதுதான் தெய்வம். அதனுடைய நுண்ணிய இயக்க ஆற்றலே விண் எனப்படும் ஆகாசம், ஆகாசத்தின் திரட்சிநிலை வேறுபாடுகள்தான் காற்று, நெருப்பு, நீர், நிலம் மற்ற நான்கு பூதங்களும். உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்திலும், ஆகாசமெனும் நுண்ணியக்கமே உணர்ச்சி ஆற்றல் பெற்று உயிராக இயங்குகிறது. உயிரே தனது புலன்கள் மூலம் அது மேலும் சிறப்படைந்த நிலையில்் அறிவுமாகி இயங்குகின்றது. மனிதன் இயற்கை வளத்தைத் தனது உழைப்பையும், அறிவுத் திறனையும் கொண்டு உருமாற்றித் துய்த்து வாழப் பழகிக் கொண்டான். இயற்கை ஒழுங்கமைப்பையும், உழைப்பின் பெருமையையும் உணராதோர், கடமை பிறழ்வதே வறுமையாக மலர்கின்றது. தெய்வநிலை, உயர்நிலை, அறிவு, உழைப்பு இரண்டின் மதிப்பு, இவற்றை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால், மகிழ்ச்சியோடும், அமைதியோடும் எல்லோரும் வாழலாம். சிலர் உணர்ந்து கடமை செய்தும், பலர் உணராமல் கடமை பிறழ்ந்தும் வாழ்வதே, உலகில் உள்ள வறுமைக்கும், துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். எல்லாம் வல்ல மெய்ப்பொருளே உயிராகவும் அறிவாகவும் மலர்ந்து இருப்பினும், புலன்கள் மயக்கத்்தில் தனது ஆற்றலைக் கட்டுப்படுத்திக்கொண்டு மயக்க நிலையில், செயலாற்றுவதால் பழிச்செயல்கள் பெருகின்றன.
சிந்திக்கும் ஆற்றலுள்ள மக்களெல்லோரும் இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் அவர்கள் தான் குடும்பம், சுற்றம், ஊர், உலகம் எனும் ஐவகைக் கடமைகளையும் முறையாக ஆற்றினால் தனி மனிதன் வாழ்வும், சமுதாய வாழ்வும் இன்ப மயமாகவே இருக்கும். மனித சமுதாயம் என்ற பேரவையில் பிரிக்க முடியாத தொடர்பு கொண்டுள்ள ஒவ்வொரு தனி மனிதனும், எல்லோருக்கும் ஒத்தும் உதவியும்தான் வாழ வேண்டு்ம். இன்றேல் ஒருவரால் பிறருக்கு உரிமைக்கேடும் துன்பமுமே விளையும். மயக்க நிலையில் உள்ளவர்களும் மற்றவர்களோடு தங்களுக்கோ பிறருக்கோ அறிவிற்கோ உடல் உணர்ச்சிக்கோ தீங்கு விளைவிக்காத முறையில் மக்கள் அனைவரும் கூட்டுறவு பூண்டு வாழ வேண்டும். அப்போதுதான் மனிதகுல வாழ்வில் அமைதி நிலவும் என மெய்யறிவு பெற்றவர்கள் உணர்ந்தனர். அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறியே மதம் (Religion) எனப்படுகின்றது. நெறி பிறழ்ந்தவர்களைத் திருத்தவும், தண்டிக்கவும் ஏற்ற ஒழுங்கு முறைகளும் மெய்யறிவு பெற்றவர்களால்தான், ஆட்சிச் சட்டமாகவும் அவற்றின் திருத்தங்களாகவும் புகுத்தப் பெற்றன


எனினும் மதங்களும் ஆட்சியும் இன்று வரையில் மனிதகுல வாழ்வில் அமைதி ஏற்படுத்துவதில் வெற்றி பெறவில்லை. காரணம்; தெய்வநிலை, உயிர்நிலை, வாழ்வின் வளம் காக்கும் பொருளாதார நிலையறிந்தவர்கள் மதத்தையும் ஆட்சியையும்நிர்வகிக்கும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த உண்மைகளையெல்லாம் நான் உணர்ந்துகொண்டேன். தெளிவான விளக்கம் பெற்றாயிற்று. எனினும் இந்த நிலையில் நான் செய்ய வேண்டியதென்ன? இந்த வினா என் உள்ளத்தில் எழுந்துிவிட்டது. உலகம், மனித சமுதாயம், ஒவ்வொரு தனி மனிதனையும் பெற்றெடுக்கின்றது. உடல்வலிவு, அறிவுத்திறம், செல்வ மேன்மை, செல்வாக்கு, இவற்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் உயருகின்றனர். சமுதாயத்தால் அளிக்கப் பெற்ற இந்த நான்கு பேறுகளையும் கொண்டு மனிதன் சமுதாயத்திற்குக் கடனாற்ற வேண்டும். பிறந்தபோது தனி மனிதன் ஏதும் கொண்டு வந்ததில்லை. அதேபோல் அவன் இறக்கும்போது கொண்டுபோவதுமில்லை. எனினும் இறப்பை நோக்கி எல்லோரும் பிறக்கின்றோம்.
பிறப்பிலிருந்து இறப்பு தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் காலமே வாழ்வாக இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ள ஆற்றல் சமுதாயத்தினுடையதே. சமுதாயத்தில் இருந்து தான் எல்லா ஆற்றலையும் பெற்றிருக்கும் உண்மையினை உணர்ந்தால் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குக் கடன்பட்டவர்களே. அந்தக் கடனை உடல், அறிவு, உழைப்பின் மூலம் சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும். சமுதாயம் தனி மனிதனை உருவாக்குகின்றது; பாதுகாக்கின்றது; எல்லா ஆற்றலையும் அளிக்கின்றது. தனி மனிதன் அவன் பெற்ற ஆற்றல்கள் மூலம் சமுதாயத்திற்குப் பட்டுள்ள கடனை, அதற்கு அவன் தன் ஆற்றலை அர்ப்பணித்துத் தொண்டு செய்வதன்மூலம் திருப்பி அளித்துக்கொண்டு வரவேண்டும். இந்த உணர்வே “நிஷ் காமிய கர்மம்” (பயன் கருதாத செயல்) ஆகும். நான் செய்யும் தொழிலுக்கு இன்னதைப் பதிலாகப் பெறுவேன் என்ற கணக்குப் போட்டுச் செயல்புரிந்தால், அது காமிய கர்மமாகும். இது மயக்க நிலையில் எழும் தப்புக் கணக்கு.
பிறந்தது முதல் இறக்கும்வரையில் எல்லோரையும் வாழ வைக்கின்றது சமுதாயம். அந்தச் சமுதாயத்திற்குத் தன் ஆற்றல் முழுமையும் அர்ப்பணித்து விட வேண்டியதுதானே நீதி. இந்தப் பேருிணர்வில் செயல்புரியும் போதுதான் , அது துறவறம் எனப்படுகின்றது. இவ்வாறத்தைப் பின்பற்றுபவர்கள்தான், தொண்டர்கள் (சந்நியாசிகள்), இந்தத் தொண்டினைக் குடும்பம் என்ற ஒரு சிறு வட்டத்தைத் தனது ஆற்றலுக்கு வரையறை செய்து கொண்டு செயல்புரிந்தால் அதுவே இல்லறம் ஆகும். இல்லறத்தார் எனில் பற்றுடையோர் என்றும், துறவறத்தார் எனில் பற்று இல்லாதவர் என்றும் பொருள் இல்லை. தனது தொண்டுக்கு உரிய பற்று ஒரு சிறு வட்டத்தை ஒட்டியதா? என்பதைக் குறிப்பிடுவனவே இல்லறம் துறவறம் என்ற வேறுபட்ட சொற்கள். எனது அறிவு, செல்வம், செல்வாக்கு, உடல் வலிவு இவற்றிற்கு ஏற்ப நான் எனது வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டேன்.
இல்லறமும் துறவறமும் இணைந்த ஒரு நல்லறமே எனக்கும் வருங்கால உலகுக்கும் நலமென முடிவு செய்துகொண்டேன். அந்த முடிவை விளக்குவதே கீழ்வரும் கவி :-


“என் பிறப்பு என் இறப்புஇரண்டையும் யானறியேன்எனினும் இவ்விரு நிகழ்ச்சிஎன் உள்ளத்தில் கொண்டேபொன் முதலாய்ப் பொருளனைத்தும்ஈட்டுகின்றேன் அவற்றைப்புவிவாழ்வின் இயல்பொக்கப்பொதுநலமே கருதிநன்மை எனும் வழிகளிலேவைத்துச் செலவாக்கிநற்சமயம் வாய்்க்குமெனில்அனைத்தையும்நான் அளிப்பேன்இன்முகமும் இனிமையுமேஎனதுசெல்வம்; வீடோஏகவெளியென் றெண்ணியான்துறவு கொண்டேன்”.


எனக்கு லுங்கி வாணிபத்தில் மிகுந்த வருவாய் கிடைத்துக் கொண்டே போயிற்று. இந்த நிலையில் போஸ்டல் ஆடிட் ஆபிஸில் வேலை செய்வது எனக்குப் பொருந்தவில்லை. மறுதலிப்பு (இராஜிநாமா) செய்துவிட வேண்டும் என்றே முடிவு செய்து கொண்டேன்.





0 comments:

Post a Comment