அருட்காப்பு

அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்!

சங்கல்பம்


அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்!

உலக சமுதாய சேவா சங்கம்





26, 11.வது கடல் நோக்குச் சாலை,
வால்மீகி நகர்,
திருவான்மையூர்,
சென்னை - 600 041.
போன் 044 - 24411692
e-mail : chennai@wcsc.info
website :http://vethathiri.org/

நான் யார்?










நான் உடல் என்று குறுகி நிற்பதா? நான் மனம் என்று விரிந்து நிற்பதா? நான் உயிர் (ஆன்மா) என்று உயர்ந்து நிற்பதா? நான் பிரம்மம் என்று உணர்ந்து, முழுதுணர்ந்து நிற்பதா? குறுகி நின்றால் விரிவு இல்லை. விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும் தான் உண்டு, உயர்வு இல்லை. உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டுந்தான் உண்டு; உணர்வு, முழுதுணர்வு இல்லை. உணர்ந்து நின்றால் இவை அனைத்தும் உண்டு. உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனம் என மறுபெயர் பெற்றிருக்கிறது. உயிரோ அணுக்கூட்டம். அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே, நான் பிரம்மம் என்பது தெளிவாகிறது. நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலை உணர்ந்த தெளிவில்தான் ஆசை ஒழுங்குறும். எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, எதை விடப் பெரிது வேறொன்றும் இல்லையோ, அதுவே நானாக இருக்கும் போது அந்நிலை உணர்ந்த தெளிவில் தான் இருக்கும் போது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவா எழ இடம் எது? என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்தபோது எதெதனோடோ என்னை ஒப்பிட்டுக் கொண்டேன். அப்போது நான் பெரியவன், நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது. ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்ட போது எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லாமலல்லவா போய் விடுகிறது. நானே பிரம்மம் ஆக இருக்கிறேன், பிரம்மம் எல்லாமாக இருக்கிறது என்னும்போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாக இருக்கும் நிலையையும் நான் உணர்ந்து மறவாமல் இருக்கும் போது, எதன் மீது பற்று வைப்பது? என்னுடையது என்ற பற்று எழ முகாந்திரமே இல்லையே! நான் இன்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் நான் யார்? நான் பிரம்மம் என்ற தெளிவுதான்.



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி









வாழ்க்கைத் தத்துவம்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்டதே வாழ்க்கை. ஆறறிவு படைத்த நாம் பிறந்த உடனே நடப்பதில்லை. ஆனால் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்கள் பிறந்த சிறிது நேரத்திலேயே நடக்கின்றன. நாம் வாழும் வாழ்க்கை இன்பமாகவே உள்ளது. ஆனால் நம்முடைய புலன்கள் வழி செல்வதாலும் பழக்கத்தாலும், சூழ்நிலைகளாலும் பெரும்பாலும் துன்பத்தை உண்டாக்கி கொள்கிறோம். கல்லூரிக்குச் செல்ல 12 வகுப்புகள் படிக்க வேண்டும் என்பது போல் வாழ்வில் முழுமைப்பேறும் குணநலப் பேறும் அடைய 12 வாழ்க்கைத் தத்துவப்படிகளை அளித்துள்ளார்.

தேவைகள் மூன்று : நம் உடலின் தேவைகளை மூன்றாகப் பிரித்துள்ளார். பசி, தாகம்,. முதல்படி. தட்பவெப்ப நிலையி லிருந்து நம்மைக் காத்துக் கொள்ளல் இரண்டாம்படி, உடலின் கழிவுகள் நீக்கம் மூன்றாம் படி.

காப்பு மூன்று : பிறஉயிர்களின் தாக்கு தலில் இருந்து காத்தல், மழை, புயல், பூகம்பம் போன்றஇயற்கைச் சீற்றத்திலிருந்து காத்தல், தற்செயல் விபத்து நடக்காமல் (accident) காத்தல்.

அறநெறி மூன்று : தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரா வகையில் எண்ணம், சொல், செயல்களை அமைப்பது ஒழுக்கம். தான், குடும்பம், உறவினர், ஊர், உலகம் என்றஐந்து வகையான கடமை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தேவைப்படுவோர்க்கு, அந்த நேரத்தில் உதவுதல் ஈகை.

அறிவின் நிலை : அடிப்படைத் தேவையான நம்பிக்கை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் பெறுமளவு அறிவு நிலையில் வாழ்தல். தன்னையறிந்த பின் முழுமை நிலையடைதல்.

நாம் ஒரு சிறு துரும்பாய் வாழ்க்கை யெனும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் நிலையில் இந்த 12 படிகளும் நமக்கு படகாய் இருந்து நம்மை கரை சேர்க்க உதவும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மனித சக்தி மகத்தான சக்தி

உடல் லகுவாக இருக்க வேண்டும் Ease ful Body. மனம் அமைதியாக இருக்க வேண்டும் Peaceful Mind. வாழ்க்கை உபயோகமாக இருக்க வேண்டும் மள்ங்ச்ன்ப் கண்ச்ங். அதற்கு நாம் வாழும் காலத் திலேயே வாழ்ந்து கொண்டு

இருக்கும் தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லிக் கொடுத்துள்ள உடற்பயிற்சிகள், தவங்கள், காயகல்ப பயிற்சி, தற்சோதனை முறைகள் உறுதுணையாக உள்ளன.

அவர் பொள்ளாச்சி அருகில் ஆழியாறில் அருட்பெருஞ்சோதி நகரை உருவாக்கி அங்கு ஓம்கார மண்டபம் அமைத்து, தங்கி இன்றும் உலக அமைதிக்காக மவுனம் உட்பட பல பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இரண்டொழுக்கப் பண்பாடு

இவ்வுலக இன்னல்களிலிருந்து விடுபட இரண்டொழுக்கப் பண்பாடு கூறுகிறார்.

1. “நான் எனது வாழ்நாளில் பிறரது உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தரமாட்டேன்”2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.ஆகா! என்ன அற்புதமான வரிகள். அனைவரும் இதைக் கடைப்பிடித்தால் துன்பமே இவ்வுலகில் இருக்காது.இன்புறுவோம்! இயல்பாய் வாழ்வோம். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பிறந்த நாள் பரிசாக இரண்டொழுக்காப் பண்பாட்டை, மேற்கொள்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

நன்றி தன்னம்பிக்கை மாத இதழ்

இறைநீதி

இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், 'ஐயோ! நான் கடவுளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே' என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன! அதனால், 'அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே!' என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி. இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதைக் கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் 'இன்னும் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லையே! எப்போதோ வர வேண்டுமே! இன்னும் வரவில்லையே!' என்று குறைபடுகிறோம். அதனால் என்ன ஆனது? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது. இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனே தான். எல்லை கட்டிய மனநிலையில் நாம் 'இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நல்ல்து, அது கெட்டது' என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இதுவரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், 'அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மனதை மறுபுறம் திருப்பிவிட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நான் உங்களுடன் இருப்பேன்



நான் வான் காந்த அலையில் கலந்துள்ளேன் உங்களுக்கு தவத்தில் எந்த இடர் ஏற்பட்டாலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் நினைக்கும்போது நான் உங்களோடு கலந்து விடுவேன் என் கையை பிடித்துக்கொண்டே நீங்கள் தவத்தில் உயரலாம். உங்களுக்கு வரும் எந்த இடரையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன்மீகத்தில் குரு காணிக்கை என்பது ஒன்று உண்டு. அதை நான் உங்களிடம் வேண்டுகிறேன். உங்களுடைய சினத்தை, பொறாமையை உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்களை தவறான செய்கைகளை எனக்கு குரு காணிக்கையாக இன்றிலிருந்து தந்துவிட வேண்டுகிறேன்".


-அருட்தந்தை

ஆளுமைத் திறன் (Personality skills)

Saturday, December 8, 2007

இயற்கை வளங்களை வாழ்வின் வளமாக உருமாற்றியும் அழகுபடுத்தியும் வாழ்ந்து வரும் இனம் மற்றவர்களோடு பிணக்கின்றி வாழ வேண்டியது மிக அவசியமாகின்றது. இந்த நெறியே அறம் எனப்படுகிறது. இந்தப் பெருநோக்கத்தில் வாழ மனதையும் செயல்களையும் சிந்தனையின் உயர்வுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். பல ஆயிரம் தலைமுறைகளாக ஆற்றிய எண்ணம், செயல் பதிவுகளால் வடிவம், தரம், திறம் அமையப்பெற்ற மனிதன் தனது ஆளுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ள வேண்டுமெனில், அதற்கு ஏற்ற உளப் பயிற்சியும் செயல்பயிற்சியும் வேண்டும். புலன்கள் மூலம் உணர்ச்சி நிலையில் வாழும் மனிதனுடைய மன அலைச்சுழல் வினாடிக்கு 14 முதல் 40 வரையில் (Beta Wave) இயங்கிக் கொண்டிருக்கிறது. சிந்தனையாற்றல் பெருக வேண்டுமெனில், மனம் வினாடிக்கு 14 சுழலுக்குக் குறைவான அலை இயக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

மனித அமைப்பில் பரு உடல் (Physical Body), நுண்ணுடல் (Astral Body), பிரணவ உடல் அல்லது சீவகாந்த உடல் (Causal Body) ஆகிய மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்புரிகின்றன. சூக்கும உடலாகிய உயிர்த்துகள் மீது (Life Force) மனம் வைத்து அகநோக்குப் பயிற்சியினைப் பழக வேண்டும். இந்தப் பயிற்சியில் அனுபவம் பெற்றவர் மூலமே இதை உணர்ந்து பழகும் பயிற்சியே அகநோக்குப் பயிற்சி எனப்படுகிறது. இப்பயிற்சியால் மன அலைச்சுழல் படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 1லிருந்து 3 வரையில் வருமேயானால் மனம் அமைதி நிலைக்கு வரும். இந்த மனநிலையில் மனம், உயிர், இறைநிலை என்ற மூன்று மறைபொருட்களையும் உணரும் திறமை மனித மனதுக்குக் கிடைக்கும். தேவையில்லாத, துன்பமே தரும் பதிவுகளை மாற்றி ஆளுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ளவும், இந்தப் பயிற்சியோடு அகத்தாய்வுப் பயிற்சிகளையும் பயின்று செய்தால் மனிதனுள் அடங்கி இருக்கும் ஆற்றல்கள் முழுவதையும் வெளிப்படுத்திப் பயன் கண்டு தானும் சிறப்பாக வாழ்வதோடு, குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் தன் கடமைகளைச் செய்து நிறைவு பெறலாம். அமைதியும் இன்பமும் பெறலாம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


--------------------------------------------------------------------------------

Personality skills
(Translation of the above article)

It is imperative that the mankind, which converts the natural assets into resources of individual and social lives, has to live in harmony. Such harmonious living is referred to as virtuous life. To lead such a harmonious life, it is necessary to re-orient our thoughts and deeds in accordance with the advancement in our intellect. The imprints of thoughts and deeds over thousands of years have resulted in mankind achieving its present form, ability and quality. If a person has to develop his personality, it is imperative to follow systematic psychological and physical practices. When a person acts under the influence of five senses, his mental frequency will be between 14 to 40 cycles per second (cps) - beta wave length. If a person has to improve his intellect it is essential to bring down the mental frequency to below 14 cps level.

In a human being, the physical body, astral body and causal body are functioning in a synchronized manner. One has to focus on the life force and meditate on that. Such a practice is called Inner travel practice. Such a practice can be learnt only from a master well versed in that.

By sincere and continuous practice the frequency level can be brought down slowly and when it reaches the levels between 1 and 3, then mind will come to a state unknown so far - state of calm. In such a state, the mind will gain the capacity to realize the noble imperceptible (hidden truths) viz., Divine state, life force and mind. To develop the personality and to weed out the unwanted and pain-causing imprints, a person has to undergo introspection practices.

The inner travel and introspection practices will bring out the so far hidden forces in a person and will cause him to function to his full potential. By this one can fulfill the duties towards self, family, near and dear, society and the world at large. Upon fulfillment of such duties will dawn peace and happiness.

0 comments:

Post a Comment